மதுரை: தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாட்டம் காவலர்கள் உறுதிமொழி ஏற்று,
தமிழக முதல்வர் ஆணைப்படி காவல் படை தலைவர் மற்றும் காவல் இயக்குனர் உத்தரவின்படியும், இன்று செப்டம்பர் மாதம் 6 தேதி தமிழக முழுவதும் காவலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக, மதுரை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் லோகநாதன் ஆணைக்கு இணங்க, திலகர் திடல் போக்குவரத்து காவல் மற்றும் கரிமேடு போக்குவரத்து காவல் நிலையங்களில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் ஆன காவலர்கள் காவல் நிலையங்களில் உறுதிமொழி எடுத்துக் கொண்டு காவலர் தினம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி