நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியைச் சேர்ந்த திருவாசகன் -ஜெய் விஷ்ணு தேவி இவர்களின் மகன் திருவாய்மொழி(16). இவர் சர் ஐசக் நியூட்டன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்து குத்துச்சண்டை மற்றும் மல்யுத்த விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் மிகுந்தவராக இருந்து வந்த நிலையில் தமிழ்நாடு அளவிலான பென்ஸ்காக் ஸ்லாட் விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும் அகில இந்திய அளவில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பென்ஸ்காக் ஸ்லாட் விளையாட்டு போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கமும் பெற்று நாகை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார். மேலும் இவர் wushu என்று சொல்லக்கூடிய மல்யுத்தம் போட்டிகளில் கலந்துகொண்டு 2018 முதல் 2023 வரை மாநில அளவில் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிக்கலை சேர்ந்த இளையராஜா மகன் துர்க்கேஷ்(15). என்பவர் சார் ஐசக் நியூட்டன் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.
அதேபோல் புஷ்பவனத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் பிரதாப் (15 ). அரசு முன் மாதிரி பள்ளியில் பதினொன்னாம் வகுப்பு படித்து வருகிறார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார். இவ்வாறு நாகை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறு வயதிலேயே திறன் பட செயல்பட்ட விளையாட்டு வீரர்களை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் திரு ஹர்ஷ் சிங் இ. கா. ப அவர்கள் நேரில் அழைத்து புத்தகங்கள் வழங்கி பாராட்டினார்கள். பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை கூறுகையில் மாணவர்களாகிய நீங்கள் மேன்மேலும் திறன் பட செயல்பட்டு இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும். அடுத்த முறை நான் உங்களை பார்க்கும் போது மென்மேலும் பல பதக்கங்களை பெற்று வாழ்வில் உயரத்திற்கு செல்ல வேண்டும். கடுமையான பயிற்சி மட்டுமே வெற்றியின் சாத்தியம் அதற்கான என் வெற்றி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பள்ளி மாணவர்களிடம் கூறினார்கள்.