கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் 2026 தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள் எல்லைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு–கேரளா எல்லையில் அமைந்துள்ள கோழிவிளை மற்றும் காக்காவிளை சோதனைச்சாவடிகளை அவர் நேரில் பார்வையிட்டு, வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்தார். மேலும், தடை செய்யப்பட்ட பொருட்கள் எல்லைத் தாண்டி வருவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, பணியில் இருந்த காவல்துறையினருக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தினார்.
















