மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மதுரை வடக்கு வட்டாட்சியர்
முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நில அளவை யார் பணிச் சுமையை குறைக்க வேண்டும், ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் சம்பள முரண்பாட்டை களைய வேண்டும். நிலப்
புலமையாளர் பணியிடத்தை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரெ. ராஜ்குமார் தலைமை வகித்தார்.
செயலர் நா. ரகுபதி முன்னிலை வகித்தார்.பொருளாளர் பா. மணி கண்டன், துணைத் தலைவர் பாலகிருஷ்ணன்,இணைச் செயலாளர் திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி