குமரி: தமிழக டி.ஜி.பி.யாக திரு.சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டார் .இதனையடுத்து அவர் அதிரடியாக மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் முழு நேரமும் 3 போலீசார் இரு சக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின் பேரில் குமரி மாவட்ட எஸ்.பி திரு.பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின்படி இன்று கன்னியாகுமரி காவல் நிலையத்தில் போலீசாரின் இருசக்கர வாகன ரோந்து பணியை கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் திரு.ஆவுடையப்பன் தொடங்கி வைத்தார்.