தேனி : கேரள மாநிலம் தேக்கடியில் தேனி மாவட்ட காவல் மற்றும் கலால் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் சமூகவிரோதிகள் கஞ்சா, சாராயம் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை திருட்டுத்தனமாக கொண்டு செல்வார்கள்.
இது போன்ற பொருட்களை கடத்துவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளான வனப்பகுதி சாலைகளில் இரு மாநில போலீசார் கலால் துறையினர் ரோந்து செல்ல முடிவுசெய்யப்பட்டது.
அதன்பேரில் தமிழக தரப்பில் தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேந்திரன், உத்தமபாளையம் காவல் துணைக் கோட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.உமா தேவி, கேரள அரசு தரப்பில் கலால் துறை உதவி இயக்குநர் திரு.வி.ஏ.சலீம், இடுக்கி மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் திரு.அபு ஆப்ரஹாம் மற்றும் இரு மாநில காவல், கலால், வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.