திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரையின்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்கி பணிபுரியும் வெளி மாநிலத்தவரை காவல்துறையினர் நேரில் சந்தித்து அவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்து வருகின்றனர். இன்று பணகுடி, வடக்கன்குளம், கீழபாட்டம் மற்றும் கங்கைகொண்டான் பகுதியில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு காவல்துறையினர், சமூக வலைதளங்களில் வெளி மாநில தொழிலாளர்களை தாக்குதல் நடத்துவது போல் வெளியிடப்பட்ட போலியான வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அச்சப்பட வேண்டாம் எனவும் தங்களது பாதுகாப்பை தமிழ்நாடு காவல்துறை உறுதி செய்யும் எனவும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.மேலும் சமூக வளைதளங்களில் தேவையற்ற வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.