திண்டுக்கல் : அரசு வாகனம் அல்லாத வாகனங்களில், தற்பொழுது தமிழகமெங்கும் பதிவெண் பலகையில், G அல்லது அ என்ற எழுத்துக்கள் எழுதப்பட்டு அல்லது, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு , மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக, பயன்படுத்தப்படுவதாக, புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம், 3 உட்பிரிவு படி அரசு வாகனம் என்றால், தமிழக அரசின் வாகனங்கள் மட்டுமே, அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு, மற்றும் காப்பு சான்று விளக்கு, உள்ளது.
எனவே உரிய வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விளக்கு, பெற்ற தமிழக அரசின் வாகனங்களில், மட்டுமே G அல்லது அ என்ற எழுத்துக்கள் பயன்படுத்த வேண்டும். எனவே தமிழ்நாடு அரசு வாகனங்களைத் தவிர மற்ற, அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள், மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின், வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துகளை பயன்படுத்துவோர், மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.