தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் S.K.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். நேற்று 4 முக்கிய காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்றும் பணியிடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய அறிவிப்பில் ராமநாதபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
-
தேவகோட்டை ஏ.எஸ்.பி (ASP) திரு.கிருஷ்ணராஜ்,IPS சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக (DC) இருந்த திரு.ராஜசேகரன்,IPS, சென்னை தலைமை துணை ஆணையராக (DC) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னை தலைமை துணை ஆணையராக(DC) இருந்த திருமதி.விமலா சென்னை உளவுத்துறை துணை ஆணையராக(DC) நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை உளவுத் துறை துணை ஆணையராக(DC) இருந்த திரு.திருநாவுக்கரசு, டிஜிபி அலுவலக ஏஐஜி(AIG) யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னை டிஜிபி அலுவலக ஏஐஜி(AIG) திரு.சாம்சன்,IPS, உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராக(DC) நியமிக்கப்பட்டுள்ளார்.
-
நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராக(DC) இருந்த திரு.சுந்தரவடிவேல், திருப்பூர் தலைமையிட துணை ஆணையராக(DC) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பு பிரிவு ஏஐஜி(AIG) திரு.ஸ்ரீதர் பாபு, சென்னை ஐ.எஸ் துணை ஆணையராக (DC) (நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை ஐ.எஸ் துணை ஆணையராக(DC) இருந்த திரு.சுதாகர், IPS சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்புப் பிரிவு ஏஐஜி ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.வருண் குமார்,IPS சென்னையில் உள்ள காவல் நவீனமய கணினிப் பிரிவு எஸ்பி (SP)ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னையில் உள்ள காவல் நவீனமய கணினிப் பிரிவு எஸ்.பியாக இருந்த, திருமதி.முத்தரசி, சிபிசிஐடி எஸ்பி(SP) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார்,IPS , தர்மபுரி மாவட்ட எஸ்பி(SP) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
தர்மபுரி மாவட்ட எஸ்பி(SP) ஆக இருந்த திரு.ராஜன், சென்னை ரயில்வே எஸ்பி(SP) ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
http://34.68.197.11/33845/