திண்டுக்கல் : திண்டுக்கல் பட்டாசு வெடிக்கும் போதோ அல்லது வேறு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இலவச தொலைபேசி எண் 100-ல் போலீசாரையும், 112-ல் தீயணைப்புத்துறையினரையும், அவசர மருத்துவ உதவிக்கு 108 ஆம்புலன்சையும் உடனே அழைக்க வேண்டும். அதேபோல் விதிமுறைகளை பின்பற்றி உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு விற்க வேண்டும். உரிமம் பெறாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது மது குடித்து விட்டு போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க குற்றத்தடுப்பு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். தீபாவளியை குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்டகண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், அவர்கள் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா