திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் காவல் நிலையங்களில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை இல்லை எனில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புகார் மனு கொடுக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் அறிவித்ததன் படி (21.12.2022), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் தீர்வு காணப்படாத மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக விசாரணை செய்தார்கள். இதில் 35 புகார்தாரர்களின் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி இதுவரை விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் திருப்தி அடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா