திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி காந்தி கிராமம் கஸ்தூரிபா தனியார் மருத்துவமனையில் பெரிய கோட்டையை சேர்ந்த காளீஸ்வரி என்பவருக்கு வயிற்றுவலி காரணமாக கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து உறவினர்கள் யாரும் காளீஸ்வரியை பார்க்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் காளீஸ்வரி உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறி திண்டுக்கல் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லுங்கள் என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து சிகிச்சை பெற்று வந்த காளீஸ்வரி உயிரிழந்ததாக தகவல் பரவியதை அடுத்து உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர் சம்பவ இடத்தில் புறநகர் டி.எஸ்.பி உதயகுமார் மற்றும் தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா