தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் பொதுமுடக்கம் காரணமாக அரசு மதுபான கடைகள், தனியார் மதுபான கடைகள் அடைக்கப்பட்டது.சிலர் மதுபான பாட்டில்களை மொத்தமாக விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
சம்பவ நாளன்று சின்னமனூர் காவல் ஆய்வாளர் லாவண்யா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். சின்னமனூர் கன்னிசேர்வைபட்டி சாலையில் செல்லும்போது சந்தேகத்துக்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் சென்று கொண்டிருந்தார்.போலீசார் அவரை விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினார்,
அவர் வைத்த பையை சோதனை செய்தபோது அதில் 150 மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.விசாரணையில் கன்னிசேர்வைபட்டி சேர்ந்த முருகன் மகன் சேகர் (35 ) என்றும் சின்னமனூரில் உள்ள தனியார் மதுபான கூடத்தின் வேலை செய்பவர் என்றும் தெரியவந்தது.போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 150 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.