திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் – ஒட்டன்சத்திரம் சாலையில் நவாமரத்துப்பட்டி பகுதியில் தீத்தாகவுண்டன்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(29). என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா