திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே ஆண்டார் மடத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 70 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இப்பள்ளி இரண்டு நிர்வாகங்கள் பெயர் மாறி மூன்றாவது நிர்வாகம் நடைபெற்று வருகிறது. இதனால் இப்பள்ளியில் முறையான ஆவணங்கள் இல்லாமல் பள்ளியை நடத்துவதாக சமூக ஆர்வலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
கடந்த ஒரு வருட காலமாக இந்த பிரச்சனை இருந்து வந்த நிலையில் அரசு உத்தரவை மீறி பள்ளி இயங்கி வந்ததாக கூறி பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு ஒரு கால ஒரு வார காலத்திற்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது மேலும் பள்ளிக்கு சீல் வைக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை பள்ளி துவங்குவதற்கு முன்பாக பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம், தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் பள்ளியில் ஆறு இடங்களில் சீல் வைத்தனர். பள்ளியில் பயின்று வரும் குழந்தைகளை அருகாமையில் உள்ள தனியார் பள்ளியிலோ அல்லது அரசு பள்ளியிலோ சேர்த்துக் கொள்வதற்கு ஆலோசனைகளை வழங்கினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு
















