விருதுநகர் : விருதுநகர் எல்.பி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (55), இவர் பேராலி சாலையில் உள்ள தனியார் பாலிபேக் நிறுவனத்தின் மேலாளராக கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். ஞானசேகரன், பாலிபேக் நிறுவனத்திற்கு தேவையான மூலப் பொருட்களை தனது மகன் கவுதம் (25), நடத்தி வந்த நிறுவனத்தில் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார். இதற்காக ஞானசேகரனும், கவுதமும் போலியான பில்களை தயார் செய்துள்ளனர். பாலிபேக் நிறுவனத்தின் கணக்கு தணிக்கையின் போது, ஞானசேகரன் போலி பில் மற்றும் ரசீதுகள் மூலம் 24 லட்சம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து தனியார் நிறுவனத்தின் கணக்காளர் செல்வராஜன், விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் தனியார் பாலிபேக் நிறுவன மேலாளர் ஞானசேகரன், அவரது மகன் கவுதம் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி