திருநெல்வேலி : திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட்டில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் மதுரை மேலூரை சேர்ந்த இளையராஜா (32). என்பவர் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் (14.07.2025) அன்று இளையராஜா, நிறுவன கிட்டங்கியில் வைத்திருந்த பொருட்களை சரி பார்த்தபோது ரூ. 30,000/- மதிப்புள்ள செம்பு பட்டைகளை காணவில்லை. இது குறித்து இளையராஜா கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளர், அபினேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரை சேர்ந்த விஜய பிரசன்னா (29). என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்