தாம்பரம் : தாம்பரம் மாநகர காவல் மணிமங்கலம் சரகம் டி- 10 மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எண் 7 மனோகர் காம்ப்ளக்ஸ், பாரதி தெரு, படப்பை, என்ற முகவரியில் ஒரகடம் தனியார் கம்பெனியில் பணி செய்து அரை எடுத்து தங்கி இருந்த விக்னேஷ் (26) திருப்பத்தூர், மற்றும் பரசுராமன் (26), திருவண்ணாமலை ஆகியோரை கடந்த (13/5/2023)-ம் தேதி 7:30 மணி அளவில் அடையாளம் தெரியாத நான்கு இளைஞர்கள் அத்துமீறி அவர்கள் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்து விக்னேஷ் பரசுராமன் இருவரையும் முதுகு கைவிரலில் வெட்டி இரண்டு சாரம் தங்க செயின் ஒன்னேகால் சவரன் மோதிரம் இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதாக பாதிக்கப்பட்ட நபர் பரசுராமன் என்பவர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகார் சம்பந்தமாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர் அமல்ராஜ் அவர்களின் உத்தரவுப்படி உதவி ஆணையர் மணிமங்கலம் சரகம் அவர்கள் மேற்பார்வையில் மணிமங்கலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் படி கரிசங்கால் காட்டுப்பகுதியில் சென்று தேடுதல் வேட்டை நடத்திய போது அங்கு மறைந்திருந்த சூர்யா (26),அழகேசன் (29), நாகு (21),விக்கி (29),சுதாகர் முப்பது ஆகிய ஐந்து நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் குற்றவாளி சூர்யா என்பவர் சமீபத்தில் மறைமலைநகர் பகுதியில் கொலை செய்யப்பட்ட வைகோ என்கிற சந்துரு என்பவரின் தம்பி மற்றும் தனது அண்ணனை கொலை செய்த பூச்சி என்ற ரத்தின சபாபதி உட்பட குற்றவாளிகளை கொலை செய்யும் நோக்கத்தோடு திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் செடிகளை வாங்கி வந்து அதை நாட்டு வெடிகுண்டாக மாற்ற சனல் கயிறு, பெவிகால் ரசாயன பவுடர், உள்ளிட்ட பொருட்களை வைத்து தயார் செய்ய ஆயத்தமாநிலையில் இருந்த போது மேற்படி குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. மேற்படி வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை உடனே கைது செய்த தனிப்படையினரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்