திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தந்தையே தனது மகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தாய் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தந்தை மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவான தந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா