தேனி: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே சேர்ந்தவர் சிக்கி (56), இவரது மகன் கோபி ( 27) இவர்களுக்கும் இதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் கஞ்சா விற்பனை செய்ததுதொடர்பாக முன்விரோதம் இருந்தது.இந்நிலையில் தந்தை மகன் இருவரையும் அதே பகுதியைச் சேர்ந்த சின்னா (22) நிவுஸ் (22) விஜய் ( 22), ஆபீல் (22), ஆகியோர் கத்தியால் குத்தினர்.
இதில் காயமடைந்த தந்தை, மகன் இருவரையும் அருகில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வந்தனர். நான்கு பேரும் தமிழகத்திற்கு காரில் தப்பிச் செல்வதாக தகவல் கிடைத்தது.
இதுபற்றி தேனி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அப்போது தேவதானப்பட்டி சோதனைச்சாவடியில் காரில் தப்ப முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.