திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம், எம்.எம்.சி காலனியை சேர்ந்தவர் சண்முகவேல் (65). அவருடைய மகன் மணிகண்டன்(38). என்பவர் மது அருந்த பணம் கேட்டு அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி மரக்கட்டையால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் சண்முகவேல் கொடுத்த புகாரின் பேரில் மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்