திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள சிவந்திபட்டி முத்தூரைச் சேர்ந்தவா் பூலையா (75). தொழிலாளியான இவர், தனக்குச் சொந்தமான இடத்தை விற்ற நிலையில் அதில் கிடைத்த பணத்தில் மகன் கணேசனுக்கு (46). பங்கு கொடுக்கவில்லை. இதனால் தந்தை- மகன் இடையே பிரச்னை நிலவி வந்த நிலையில், (01.04.2025) அன்று முத்தூர் சாலையில் பூலையா நின்றிருந்தபோது, அங்கு வந்த கணேசன் தகராறில் ஈடுபட்டு அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இத்தகவல் அறிந்த சிவந்திபட்டி காவல்துறையினர், கணேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்