திண்டுக்கல் : திண்டுக்கல், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தை ஜோசப் ஜெயசீலன்(44), என்பவரை போக்சோ வழக்கில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜோசப்ஜெயசீலனின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட S.P. பாஸ்கரன், பரிந்துரையின்படி திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி, ஜோசப் ஜெயசீலனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஜோசப் ஜெயசீலனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா