திருநெல்வேலி: நாங்குநேரி காவல் நிலைய சரகம் பட்டர்புரத்தை சேர்ந்த ஆறுமுகராஜா(45), என்பவர் அதே பகுதியை சேர்ந்த செல்லையா(65), மற்றும் அவரது மனைவி பேச்சித்தாய்(55), ஆகிய இருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் இன்று எதிரி ஆறுமுகராஜாவிற்கு திருநெல்வேலி மாவட்ட நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 3 ஆயிரம் அபராதம் கிடைக்க காரணமாக இருந்த நாங்குநேரி காவல் நிலைய நீதிமன்ற காவலர் திரு.ஜோசப் மில்டன், அவர்களை இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார்.