திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பேட்டை பகுதியில் (21.02.2025) அன்று
காவல் உதவி ஆய்வாளர், ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த பேட்டை சத்யா நகரை சேர்ந்த குமார்(40). என்பவரை சோதனை செய்ததில் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை செல்போன் மூலம் விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்தனர்.
மேலும் சந்திப்பு பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ஆஸ்மி மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது தெற்கு விளாகம் பகுதியில் சுடலைமுத்து (34). என்பவரை சோதனை செய்ததில் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மற்றும் பணம் ரூ.4,560/- ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்