தேனி : தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் SI திருமதி.முனியம்மாள், SIதிரு.ஜெயபாண்டி ஆகியோர் தலைமையிலான HCதிரு.பழனிகுமார் (தனிப்பிரிவு), PC திரு.ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து சென்று லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட் பழனிச்சாமி50) என்பவரை கைது செய்து பிரிவு 5 r/w 7(3) TNLR ACT-ன் வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து ₹3390/- மதிப்பிலான 113-லாட்டரி சீட்டுகளும், தமீம்அன்சாரி(37) என்பவரை கைது செய்து பிரிவு 5 r/w 7(3) TNLR ACT-ன் வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து ₹3600/- மதிப்புள்ள 120-லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.