தூத்துக்குடி: தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. நிவேதா மற்றும் போலீசார் (28.03.2026) வட பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜார் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்ததில், அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையின் உரிமையாளரான தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (31). என்பவர் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளி விஜயகுமாரை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 19,000/- மதிப்புள்ள 14 கிலோ 851 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வட பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















