தூத்துக்குடி: புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுப்பாடு பகுதியில் (09.02.2026) புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் அதில், தூத்துக்குடியைச் சேர்ந்த சஞ்சய் குமார் (26/26). என்பவர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பீடி இலைகளை அந்த சரக்கு வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் குற்றவாளி சஞ்சய் குமாரை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 16 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 52 பீடி இலை பண்டல்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி ரோந்து பணியின் போது துரிதமாக செயல்பட்டு சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட பீடி இலைகளை பறிமுதல் செய்தும் குற்றவாளியை கைதும் சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை காவல் நிலைய போலீசாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
















