தேனி: தேனி மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் போலீசார் கிராமங்கள் நாள்தோறும் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட இடங்கள் தடை செய்யப் பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்ததுள்ளது.
இந்நிலையில் நேற்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த திண்டுக்கல் சரக டி,ஐ,ஜி முத்துச்சாமி, தேவதானப்பட்டி எண்டபுலிப்பட்டி, லட்சுமிபுரம், ஊஞ்சம்பட்டி, பழனிசெட்டிபட்டி வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தோற்றால் தடைசெய்யப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும் முகக் கவசம் அணிவது குறித்து
பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வையும் கூறினார். மேலும் தொற்று ஏற்பட்டு உள்ள கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு பாடலை கண்டிப்பாக ஒலிக்க விட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது தேனி மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி. டிஎஸ்பி முத்துராஜ். இன்ஸ்பெக்டர் மதன கலா ஆகியோர் உடனிருந்தனர்.