தூத்துக்குடி: புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்தில் கடத்திய வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (42). வடிவேல்முருகன் (44). மற்றும் மகேஷ்வரன் (30). ஆகியோர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க புதியம்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுந்தரமூர்த்தி அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை.சிலம்பரசன் அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி 3 குற்றவாளிகள் (22.01.2026) தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
















