தேனி: ஆண்டிபட்டி அருகே வைகை அணை காவல் நிலையம் உள்ளது வைகை அணை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த டூவீலரை மறித்து சோதனை செய்ததில் ரூபாய் 14 ஆயிரம் மதிப்புள்ள 2,160 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணையில்,தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் பள்ளி தெருவைச் சேர்ந்த கமாலுதின் மகன் உதுமான் அலி (48) என்பது தெரியவந்தது. பின்னர் இது சம்பந்தமாக வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.