தேனி : முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாம் மையத்திற்கு சென்று கொரோனா தடுப்பூசி போடும் முன்பு கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவர்களிடம் தக்க மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு பின்பு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.