திருச்சி : திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக சுரேஷ் (35) என்பவரை கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குற்றவாளிளான 1.கல்பேஷ், 2.அஸ்வின் குமார், 3. கவியரசன் ஆகியோர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின்பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
















