திருநெல்வேலி: 43 வது அகில இந்திய மூத்தோர் தடகள போட்டிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகரைச் சேர்ந்த C2-சுப்பிரமணியபுரம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.குமரேசன் அவர்கள் 200 மீட்டர் (4X100) தொடரோட்டப் போட்டியில் தங்க பதக்கமும், 400 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும்,
மதிச்சியம் போக்குவரத்து தலைமை காவலர் திரு. செந்தில்குமார் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல மற்றும் வெள்ளி பதக்கமும், உயரம் மற்றும் நீளம் தாண்டுதலில் வெள்ளி பதக்கமும், குற்றப்பிரிவு தலைமை காவலர் திரு. முனீஸ்வரன் நீளம் தாண்டுதலில் வெள்ளி பதக்கமும், மும்முறை தாண்டுதலில் வெண்கல பதக்கமும் வென்றனர். வெற்றிபெற்ற அனைவரையும் மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
















