தஞ்சை: தஞ்சை மாவட்ட காவல் துறையின் 61 – வது காவல் கண்காணிப்பாளராக திருமதி.ரவளிப்பிரியா IPS நேற்று 4-8-2021 காலை பொறுப்பேற்றார். இவர் தஞ்சை மாவட்டத்தின் முதல் பெண் காவல் துறை கண்காணிப்பாளர் ஆவார் என்பது குறிப்பிட தக்கதாகும். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து, திண்டுக்கலில் குற்றங்களை சிறப்பாக கையாண்டு, திண்டுக்கல் மக்களின் அன்பை பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தனது பணியை தொடர உள்ளார்.
புதியதாக பொறுப்பேற்று இருக்கும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி . ரவளிப் பிரியா IPS அவர்கள் பணி சிறக்க போலீஸ் நியூஸ் பிளஸ் தின மின் இதழ் சார்பில் நல் வாழ்த்துக்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்