தஞ்சாவூர் : ஆந்திராவிலிருந்து, காரில் கடத்தி வரப்பட்ட, 1 கோடி ரூபாய் மதிப்பிலான, 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த , காவல்துறையினர், ஒருவரை கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், இருந்து திருத்துறைப்பூண்டி, வழியாக காரில், தஞ்சாவூருக்கு, கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில், தனிப்படை காவல்துறையினர், நேற்று காலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த ஒரு காரை, சோதனை செய்த போது, அதில், 150 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது. காரையும், கஞ்சாவையும் காவல்துறையினர், பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம், கணவாய்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரன், (26), என்பவரை கைது செய்து, திருத்துறைப்பூண்டி காவல்துறையினரிடம், ஒப்படைத்தனர். காரின் நம்பர் பிளேட்டுகளை மாற்றி, கஞ்சாவை கடத்தி வந்தது காவல்துறையினர், விசாரணையில் தெரிய வந்தது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்