திண்டுக்கல் : திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி எஸ்.நந்தினி அவர்கள் பிளஸ் டூ தேர்வில் 600/600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை படைத்த மாணவி எஸ்.நந்தினி அவர்களுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் முனைவர் இரா. இறையன்பு அவர்கள் தமிழ்நாடு காவல்துறை படைத்தலைவர் டாக்டர் சி.சைலேந்திரபாபு அவர்கள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் உயர்திரு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அனைத்து அரசு துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாட்டின் அமைச்சர் பெருமக்கள் அரசு அதிகாரிகள் அனைவரும் திண்டுக்கல் மாவட்டத்தின் தச்சு தொழிலாளியின் மகள் எஸ்.நந்தினி பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்தமைக்காக பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி