கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் பெங்களூரைச் சேர்ந்த நிர்மலா என்பவர் (30.10.2025) ஆம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வந்து புதிய பேருந்து நிலையத்தில் டவுன் பஸ் ஏறி R C பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் மாலை சுமார் 4.15 மணிக்கு இறங்கிய போது அவருக்கு பின்னால் இறங்கிய நபர் அவருடைய பையில் இருந்த இரண்டு பவுன் வளையிலை பர்சோடு எடுத்து திருடிக் கொண்டு சென்றதை பார்த்து சத்தம் போட்டு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தங்க வளையலை திருடிய நபரை பிடித்து வைத்து கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்க வளையலை திருடிய நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். நிர்மலா காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் தங்க வளையலை திருடிய நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்து சிறையில் அடைத்தனர்.















