சென்னை : கூடுவாஞ்சேரி, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தெருவைச் சேர்ந்தவர், வெங்கடேஷ், 42. இவர், மேற்கு தாம்பரம், சி.டி.ஓ., காலனி, 3வது பிரதான சாலையில், ‘காயின் பிளஸ்’ என்ற பெயரில் தனியார் நிறுவனம், நடத்தி வந்தார். இவரது, நிறுவனத்தில் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த, அனுராதா, (36), என்ற பெண் பணியாற்றினார். இவர், வெங்கடேஷ் தன்னிடம் பணம் பெற்று, தங்க நாணயம் வழங்குவதாகக், கூறி, ஏமாற்றியதாக, தாம்பரம் காவல் நிலைய குற்றப்பிரிவில், புகார் அளித்தார். இதையடுத்து, வெங்கடேஷ் மற்றும் அவரது அலுவலகத்தில், கணக்காளராக, பணிபுரியும் அனிதா, (44), ஆகியோரிடம் தாம்பரம் காவல்துறையினர், விசாரித்தனர். அதில், அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.