திருநெல்வேலி : கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோல்டன்நகரைச் சேர்ந்த முத்துக்குமார், என்பவர் கடந்த (03.06.2022), -ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சங்கரன்கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் (06.06.2022), -ம் தேதி அன்று வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 23 கிராம் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து முத்துக்குமார் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில், புகார் அளித்ததன் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி.ராஜகுமாரி, உதவி ஆய்வாளர் திரு.ஆபிரகாம் ஜோசப், அவர்கள் தலைமையிலான காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.
இவ்வழக்கில், குற்றவாளியான கீழவைராவி குளத்தைச் சேர்ந்த வசந்தகோபி(22), அடைய கருங்குளத்தை சேர்ந்த கண்ணன்(46), இசக்கிபாண்டி(34) மற்றும் இளையராஜா(30) ஆகியோரை (02.07.2022)-ம் தேதி கைது செய்து 108 கிராம் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தார். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த திருப்பூரை சேர்ந்த மணிமாறன்(34), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 23 கிராம் தங்க நகை 169 கிராம் வெள்ளி மற்றும் ரூ.27 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.