திருநெல்வேலி: திருநெல்வேலி, தாழையூத்து அருகேயுள்ள தென்கலம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ரவி. இவரது மனைவி லெவன்ஸியா (38). இவா், கடந்த 17-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றாா். பிறகு திரும்பி வந்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டிற்குள் பீரோவும் உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 6.5 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து மானூா் காவல் நிலையத்தில் லெவன்ஸியா புகாா் அளித்தாா். அதன் பேரில், மானூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்