கன்னியாகுமரி: குமாரபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வங்கியில் அடகு வைப்பதற்காக தங்க சங்கிலி-கம்மல் என ஒன்றரை பவுன் நகையை கொண்டு சென்ற போது தவறவிட்டார். இந்நிலையில் தாழாக்குடி கனகம் மூலம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் அந்த சாலை வழியாக வரும்போது கீழே கிடந்த நகையை எடுத்து ஆரல்வாய்மொழி போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர்.பச்சைமால் விசாரணை மேற்கொண்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். மேலும் சாலையில் கிடந்த நகையை எடுத்து பத்திரமாக போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளர் ஐயப்பனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
















