திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள கீழ புத்தனேரியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் நாங்குநேரி தேரடி தெருவிலுள்ள தேர் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையில் 10 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியைக் கண்டெடுத்தார். பின்னர், அந்த நகையை நாங்குநேரி காவல் நிலையத்தில் நேர்மையாக ஒப்படைத்தார். காவல்துறையினர் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சுபா (31). என்பவர் நகையைத் தவறவிட்டது தெரிய வந்ததையடுத்து காவல் ஆய்வாளர், சாகுல் ஹமீது நகையை சுபாவிடம் ஒப்படைத்தார். வேல்முருகனின் நேர்மையைப் பாராட்டி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., அவருக்கு சான்றிதழ் வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்