திண்டுக்கல் : திண்டுக்கல் எம். வி.எம் நகர் புஷ்பலதா என்பவரது வீட்டில் கதவை உடைத்து பீரோவில் இருந்த 61 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இதையடுத்து கொள்ளையடித்துச் சென்ற வாலிபர்களை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் மருத்துவர். பிரதீப் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து நகர் புற துணை கண்காணிப்பாளர்.சிபின் மேற்பார்வையில்,நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்.சுப்பிரமணி, நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர்.மோகன், சார்பு ஆய்வாளர். மலைச்சாமி, குற்றப்பிரிவு காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர்கள். வீரபாண்டியன்,ஜார்ஜ் எட்வர்ட் தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம், சக்திவேல்,சேகர் ஆகியோர் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஜித்தேந்தர், மனோஜ் குமார் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
![](https://policenewsplus.in/wp-content/uploads/2021/06/dindigul-alagu-raja-233x300.jpg)
திரு.அழகுராஜா