சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே மதகுபட்டியில் தச்சம்புதுப்பட்டி சாலையில் பாண்டித்துரை என்பவர் ஏழுமலையான் பைனான்ஸ் மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார் கடையின் சுவற்றை நேற்று இரவு மர்ம நபர்கள் நவீன இயந்திரம் மூலம் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நகை மற்றும் பணம் வைத்து இருந்த லாக்கரை உடைத்து நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து சிவகங்கை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே உமேஷ் பீரவீன் சம்பவ இடத்தில் தற்பொழுது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மோப்ப நாய்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு.
கைரேகை மற்றும் தடயங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். கொள்ளையர்கள் அடகு கடை பெட்டகத்தை உடைக்க பயன்படுத்திய கை உரைகளை கழட்டி தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர் .அந்த வளாகத்தில் காவலாளி விடுமுறைக்கு சென்று உள்ளதை நோட்டம் இட்டு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது திருடு போன நகை, பணத்தின் மதிப்பு போலீஸ் விசாரணை முடிந்த பிறகு தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது. அடகு கடை உரிமையாளர் தரப்பில் ஒரு கோடி ரூபாய் வரை கொள்ளை போயிருப்பதாக தெரிவிக்கின்றார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி