சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருவியாபட்டி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார், த/பெ.சேதுராமன், சசிவர்ண கருவியாபட்டி, என்பவரின் வீட்டில் (06.11.2024)ம் தேதி முதல் (18.11.24)-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டை உடைத்து வீட்டில் இருந்த நகைகள் மற்றும் கோவில் நகைகளை திருடிச் சென்று விட்டதாக செந்தில்குமார் என்பவர் (19.11.2024)-ம் தேதி அளித்த புகாரின் பேரில் សំ ល លយល់ ៣ : 163/24, U/s.331(3), Or 331(4), 305 BNS L வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் எதிரிகளை தேடிவந்தனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், காரைக்குடி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆத்மநாதன், அவர்கள் மேற்பார்வையில், காரைக்குடி வடக்கு காவல் ஆய்வாளர் ரவீந்திரன், பள்ளத்தூர் காவல் ஆய்வாளர் திருமதி.சுந்தரி, மற்றும் சார்பு ஆய்வாளர் இளையராஜா, ஆகியோர்கள் தலைமையிலான தனிப்படையினர் விரல் ரேகை மற்றும் CCTV காட்சிகள் தொழில் நுட்ப உதவியுடன் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட கருவியாபட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் த.மெசேதுராமன் மற்றும் சோமசுந்தரம் த.பெ.கல்யாணசுந்தரம், அரியக்குடி, (அமுதா பைனான்ஸ்) ஆகியோர்கள் அடையாளம் கண்டு பள்ளத்தூர் காவல் ஆய்வாளர் அவர்களால் கைது செய்யப்பட்டு அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகளிடமிருந்து தங்க நகைகள் 103 பவுன், வெள்ளி பொருட்கள் 04 கிலோ மற்றும் பணம் ரொக்கமாக 1,55,000/- கைப்பற்றபட்டது.
குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காரைக்குடி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆத்மநாதன், அவர்கள் மற்றும் அவரது அணியினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினர்கள். மேலும் இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி