கிருஷ்ணகிரி: நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சில்பா என்பவர் சித்தனப்பள்ளி கிராமத்தில் உள்ள ராகுல்காந்தி நகரில் குடியிருந்து வருவதாகவும் சில்பாவின் பெரியம்மா மகன் குற்றவாளி திருமணமாகி விவாகரத்து பெற்று அவரது வீட்டின் அருகே குடியிருந்து கொண்டு தன்னுடைய வீட்டில் சாப்பிடுவதாகவும் தானும் தனது கணவரும் வேலைக்கு செல்லும் பொழுது வீட்டில் சாவியை அவரிடம் கொடுத்துவிட்டு செல்வது வழக்கம் எனவும் தனது வீட்டில் ஹாலில் உள்ள பீரோவின் சாவியை பூட்டாமல் அதிலேயே விட்டுவிடுவது வழக்கம் எனவும் (25.01.2025) ஆம் தேதி காலை சுமார் 08.00 மணிக்கு தான் பீரோவில் தனது நகைகளை பார்த்ததாகவும் பின் (22.02.2025) ஆம் தேதி இரவு சுமார் 8.00 மணிக்கு பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்த சுமார் 18 பவுன் நகைகள் காணவில்லை என (23.02.225) ஆம் தேதி சில்பா காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து வீட்டில் 18 பவுன் நகையை திருடிய நபரை கைது செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.