சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா பள்ளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருவியப்பட்டியில் கடந்த 19ஆம் தேதி வீட்டை உடைத்து 103 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தில் கருவியப்பட்டியை சேர்ந்த சேதுராமன் மகன் உள்ளூர் குற்றவாளி சுரேஷ் வயசு (30). கைது செய்யப்பட்டார். இதற்கு முன் இவன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தவன் என்று சொல்லப்படுகிறது. இவரிடம் திருட்டு நகைகளை வாங்கியதாக காரைக்குடியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் டிஐஜி சிவகங்கை எஸ்பி காரைக்குடி டிஎஸ்பி ஆத்மநாதன்,
பள்ளத்தூர் ஆய்வாளர் சுந்தரி காரைக்குடி ஆய்வாளர் ரவீந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் குற்றவாளிகளை 2-நாட்களில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. அக்பர் அலி