கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல் நிலைய பகுதியில் சுந்தரி என்பவர் ஓசூர் வெங்கடேஸ்வரா லே அவுட் – ல் உள்ள தனது அக்காவிற்கு உடல்நிலை சரியில்லை என பார்க்க (03.08.2025) ஆம் தேதி காலை சுமார் 10.30 மணிக்கு தனது அக்கா வீட்டின் அருகில் நடந்து சென்றபோது குற்றவாளி கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து சென்று விட்டதாக சுந்தரி ஓசூர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து தங்க செயினை பறித்து சென்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.