கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய பகுதியில் சரோஜா என்பவர் தனது நிலத்திற்கு போக வேண்டி (10.11.2025)ம் தேதி காலை சுமார் 06.10 மணிக்கு திருப்பதி என்பவருடைய மாந்தோப்பில் நடந்து சென்றபோது பின்னால் வந்த மூன்று குற்றவாளிகள் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை பறித்து தப்பித்து சென்றுள்ளனர். சரோஜா மத்தூர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து தங்க கம்மல் பறித்து சென்ற மூன்று நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.















